Pubg game வரலாறு.
உலகத்தில் பப்ஜி கேம் பற்றி தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை ஏனென்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்துள்ளது. இந்த வருடத்தில் உலகில் அதிக பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒரே ஒரு விளையாட்டு மென்பொருள் இதுவே ஆகும்.
இந்த கேமை தயாரித்தவர் அயர்லாந்து நாட்டைச்சேர்ந்த பிரண்டன் கிரீன் ஆவார்
அயர்லாந்து தீவிலுள்ள ஒரு குட்டி கிராமத்தில் பிறந்த இவர் எவ்வாறு இப்படிப்பட்ட மிகப்பெரிய கேம் மென்பொருளை கண்டுபிடித்தார். எவ்வாறு அந்த நிறுவனத்தின் சிஇஓ ஆனார் என்பதை இந்த பதிவில் காணலாம்.
நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவருக்கு புகைப்படத் துறையில் மிகுந்த ஆர்வம் இருந்தது எனவே அது சம்பந்தப்பட்ட வேலையை பார்த்து வந்தார். இந்நிலையில் ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டு அந்தப் பெண்ணையே திருமணமும் செய்து கொண்டார். பிறகு அவர்கள் இருவரும் பிரேசில் நாட்டிற்கு சென்று தங்களது வாழ்க்கையை ஆரம்பிக்க தீர்மானம் செய்தனர்.
பிரண்டன் பிரேசில் உள்ள விலங்குகளை புகைப்படம் எடுக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். அதே சமயத்தில் வெப் டிசைனிங் மற்றும் மென்பொருள் சம்பந்தமான சிறுசிறு விஷயங்களை தெரிந்து கொள்கிறார்.
திருமணமாகி இரண்டு வருடங்கள் முடிவடைந்த நிலையில் பிரண்டன் தனது மனைவியிடம் நேரத்தை செலவிடுவதில்லை. ஏனென்றால் அவர் முழுவதும் வேலை வேலை மற்றும் கேம் விளையாடுவதில் தனது நேரத்தை செலவிட்டார். இதனால் மனமுடைந்த பிரண்டன் மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்று விட்டார். நீதிமன்றமும் இவர்களுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது.
இதனால் மனமுடைந்த பிரண்டன் தனது வேலையை விட்டுவிட்டு மறுபடியும் தனது கிராமத்திற்கு சென்று விட்டார். சென்ற பிரண்டன் வாழ்வில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தார். அந்நிலையில் தான் அவருக்கு ஒரு யோசனை உண்டானது. அது என்னவென்றால் நாம் ஏன் ஒரு கேமை உருவாக்கக் கூடாது என முடிவெடுத்தார். எதற்காக இணையதளத்தில் கேமை எப்படி உருவாக்குகிறார்கள் மற்றும் அதற்கு என்னெல்லாம் தேவை என தீவிரமாக ஆராய்ந்தார். ஒரு வருட கடின உழைப்பிற்குப் பிறகு பிரண்டன் ஒரு சிறிய கேமை உருவாக்குகிறார். அந்த கேமை இணையதளத்தில் இலவசமாக பதிவிடுகிறார். இது குழந்தைகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறுகிறது. எனவே தனது உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைத்ததை அறிந்து பிரண்டன் தொடர்ந்து 4 விளையாட்டு மென்பொருள்களை தயார் செய்கிறார். அதையும் இணையதளத்தில் இலவசமாக பதிவிடுகிறார். இதனால் ப்ரண்டனுக்கு மேலும் மேலும் ஆர்வம் அதிகமாகிக்கொண்டே போனது.
இவரின் கேம் உருவாக்கும் திறமையை அறிந்து சோனி நிறுவனம் தனது நிறுவனத்தில் கேம் உருவாக்கும் ஊழியராக பணியை கொடுத்து அழைப்பு விடுத்தது.
பிரண்டன் நும் தனது கிராமத்தில் இருந்து சோனி நிறுவனத்திற்கு வேலைக்கு செல்கிறார். ஆனால் அங்கு அவருக்கு போதிய மரியாதை இல்லை மேலும் அவருடைய ஆலோசனைகளுக்கும் மரியாதை இல்லை என அறிந்த அவர் அடுத்து என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்தார்.
அந்நிலையில் தான் அவருக்கு கொரியா நாட்டிலுள்ள மிகப்பெரிய கேம் தயாரிக்கும் நிறுவனம் அழைப்பு விடுத்தது. இதை அறிந்த பிரண்டன் மிகவும் சந்தோஷப்பட்டு கொரியா புறப்பட்டார். அங்கு சென்று அந்நிறுவனத்தின் தலைவரான கிம் என்பவரை சந்தித்தார்.
கிம் ப்ரண்டனிடம் கூறியது என்னவென்றால் உனக்கு ஒரு வருடம் அவகாசமும் 35 ஊழியர்களும் தருகிறேன் நீ எனக்கு ஒரு பிரம்மாண்டமான கேமை உருவாக்கி தர வேண்டும் எனக் கூறுகிறார். பிரண்டன் யும் தனது கடின உழைப்பாலும் புத்திசாலித்தனத்தால் இந்த கேமை ஒரு வருடத்திற்குள் முடித்து கிம் இடம் ஒப்படைத்தார். அதற்கு அவர் வைத்த பெயர் பிளேயர் அன்னோன் பேட்டில் கிரவுண்ட் அதை சுருக்கி பப்ஜி என பெயர் மாற்றம் செய்தார்கள்.
இந்த கேம் இணையதளத்தில் பதிவிட்ட ஒரு வருடத்தில் உலகத்திலேயே அதிக பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட கேம் பட்டியலில் முதலிடத்தை பெற்றது இதனால் அந்நிறுவனத்திற்கு பல பில்லியன் டாலர் ஊதியமாக பெறப்பட்டது இதனால் பிரண்டன் மிகப்பெரிய ஒரு நிலையை அடைந்தார்.
ப்ரண்டனின் வாழ்க்கையிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் முயற்சி செய்தால் வெற்றி கண்டிப்பாக ஒரு நாள் நம் கையில் வந்து அடையும்.
எனவே நமக்குள்ளும் ஏதாவது ஒரு திறமை இருக்கும் அதை வெளிக்கொணர்ந்து அதற்காக நாம் நம்முடைய நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டால் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறலாம். நன்றி
கருத்துகள்