கீழடியை விட பழமையான ஆதிச்ச நல்லூர் .மறைக்கப்பட்ட உண்மைகள்.


அனைத்து தமிழ் பேசும் உள்ளங்களுக்கும் வீரத் தமிழனின் வணக்கம்
அனைவரும் கீழடி பற்றி தொடர்ந்து தற்பொழுது வரும் செய்திகளை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த கீழடி அகழ்வாராய்ச்சி நடக்க ஆரம்பித்த காலகட்டத்தில் வந்த முடிவுகள் 2300 ஆண்டுகள் பழமையானது தமிழர் நாகரிகம் என்று. ஆனால் அது தற்போது நடந்த அகழ்வாராய்ச்சியின் போது 2600 ஆண்டுகள் தமிழர் நாகரிகம் இருக்க கூடும் என உறுதியானது. தமிழன் 2600 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தான் என்பதை அறிந்த நாம் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் 2600 ஆண்டு வரலாறு கொண்ட பகுதியை நாம் பெரிதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் அது உண்மை அல்ல இதைவிட மிகப்பெரிய சாம்ராஜ்யம் ஏற்கனவே பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதாவது சுதந்திரத்திற்கு முன்பு ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களால் நமது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் எனும் கிராமத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் அவர்களுக்கு காத்திருந்தது ஒரு பெரிய இன்ப அதிர்ச்சி.
அது என்னவென்றால் அவர்கள் அகழ்வாராய்ச்சி பணிக்காக தோண்டிய இடங்களில் அதிகமாக முதுமக்கள் தாழிகள் பல கண்டெடுக்கப்பட்டன.

முதுமக்கள் தாழி என்றாள் என்னவென்று உங்களின் பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை.
முதுமக்கள் தாழி என்பது அந்த காலத்தில் இறந்தவர்களின் உடலையோ அல்லது இறக்கும் தருவாயில் உள்ளவர்களின் உடலையோ 4அடி உயரமான மண் குடுவையில் அமரவைத்து அதனுடன் அவர்களுக்கு பிடித்தமான உணவுகள் மற்றும் ஆடைகள் ஆபரணங்கள் போன்றவற்றை வைத்து மண்ணில் மூடிவிடுவார்கள். அது ஏனென்றால் அவர்கள் இறந்தாலும் அவர்களுடைய ஆன்மா அந்தப் பொருட்களை பயன்படுத்தும் என்ற நம்பிக்கை .
அதன் பிறகு மூன்று மாதங்களுக்குப் பிறகு நடந்த அகழ்வாராய்ச்சியில் முதுமக்கள் தாழி உடன் சேர்ந்து பல எலும்புக்கூடுகளும் கண்டறியப்பட்டது.

இதனால் ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். பின்பு அந்த எலும்புக்கூடுகளை ஆராய்ச்சி செய்தபோது ஒரு பெரிய அதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது. இந்த அதிர்ச்சி அவர்களுக்கு மட்டுமல்ல இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் தான். அது என்னவென்றால் அங்கு கண்டறியப்பட்ட எலும்புக்கூடுகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் எலும்புக்கூடுகள்.
மற்றொன்று அந்த முதுமக்கள் தாழியில் இருந்தது தமிழர்களின் எலும்புக்கூடுகளை அல்ல. என்ன ஆச்சரியமாக உள்ளதா. ஆம் அவர்களுக்கும் அதே ஆச்சரியம்தான்.
அப்போது அதில் இருந்தது யாருடைய எலும்புக்கூடு என்று ஆய்வு செய்து பார்த்ததில் அது ஆப்பிரிக்காவில் உள்ள ஒருவகை பழங்குடி மக்களின் எலும்புக் ஊடாகவும், மற்றொன்று ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்கால மக்களின் எலும்புக்கூடுகள் உடனும் ஒத்துப்போவதாக கண்டறியப்பட்டது.
நீங்கள் நினைக்கலாம் 3000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் அங்கு இல்லையா என்று பதில் உள்ளே இருக்கிறது.
இந்த எலும்புக்கூடுகள் கிடைத்தது வெறும் ஒரு வருட அகழ்வாராய்ச்சியில் கிடைத்ததுதான் இன்னும் ஒரு நகரமே மண்ணுக்குள் புதைந்திருக்க வாய்ப்புள்ளது.

ஆம் ஆபிரிக்கா மக்களும் ஆஸ்திரேலியா
மக்களும் தூத்துக்குடிக்கு வாணிபம் மேற்கொள்ள கடல்வழி பயணமாக வந்திருக்கக்கூடும் அல்லது அவர்களும் நம்முடன் ஒன்றாக வாழ்ந்திருக்க கூடும் என்ற கூற்றும் உள்ளது.

மீண்டும் அந்த அகழ்வாராய்ச்சி பணி நடந்தால் தமிழனின் வரலாறு மட்டுமல்ல உலக வரலாறு நமக்கு தெரியவரும்.
தமிழனின் வரலாற்றை வெளிக்கொண்டு வருவதில் ஏன் இந்திய அரசாங்கம் இவ்வளவு அலட்சியம் காட்டி வருகிறது என்று தான் புரியவில்லை.
வரலாற்றையே புரட்டிப்போடும் நமது ஆதிச்சநல்லூர் தற்போது குடிகாரர்களின் இருப்பிடமாக மாறி வருகிறது. தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இதைக் கருத்தில் கொண்டு ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி பணியை தொடங்கவேண்டும் இதற்கு தமிழர்களாகிய நமது பங்களிப்பும் வேண்டும்.
                       வாழ்க தமிழ்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்